Sunday, July 31, 2011

கம்ப்யூட்டர் வேகத்தை அதிகரிக்க புதிய வழிகள்

by-irenujan
கம்ப்யூட்டர் பாவிக்கும் போது நிறைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.கம்ப்யூட்டர் பூட் ஆகுவதற்கு அப்பிளிகேஷன்ஸ் ஓபன் பண்ணுவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். ஆகவே கீழ்வரும் சில வழிமுறைகளை செய்து பாருங்கள் கணனியின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. * உங்கள் கணனி பூட் ( Boot) ஆகி முடியும் வரை எந்த அப்பிளிகேஷனையும் (Application) ஓப்பன் ( Open) பண்ணாதிருங்கள்.
* ரிப்பிரஷ் ( Refresh) பண்ணுங்கள் ஏதாவது ஒரு அப்பிளிக்கேஷனை குளோஸ் பண்ணும் போதும்.அவ்வாறு பண்ணும் போது தேவையில்லாத பைல்கள் ரம்மில் ( RAM ) இருந்து நீக்கப்படும்.
* டெக்ஸ்டோப்பில் பெரிய அளவிலான படங்களை ( Large file size images) வோல்பேப்பராக ( Wallpaper ) போடுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.அதன் மூலமாக ரம்முக்கு ( RAM ) செல்லும் 64 (MB) மீதப்படுத்த முடியும்.
* டெக்ஸ்டோப்பை ( Desktop ) ஷாட்கட்களால் ( Shortcuts) நிரப்பி வைக்க வேண்டாம்.தேவையான ஷாட்கட்டை மட்டும் வைத்திருங்கள்.ஒவ்வொரு ஷாட்கட்டுக்கும் 500 பைட்ஸ் ( Bytes) ரம்முக்கு ( RAM ) செல்லும்…
* எப்போழுதும் ரிஸக்கல்பீன்குள் ( Recyclebin) இருக்கும் அழித்த பைல்களை அதற்குள்ளும் இருந்து நீக்கி விடுங்கள்.
* தினமும் இன்டநெட் டெம்பரி பைல்களை அழித்துவிடுங்கள்.( Temporary Internet Files)
* இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை டீபோறோமன்ட் ( Defragment) பண்ணுங்கள் அதன் மூலமாக உங்கள் ஹாட்டிஸ்கில் இருக்கும் இடைவெளிகள் சரி செய்யப்படும்.
* உங்கள் ஹாட்டிஸ்கை இரு பார்டிஸ்சனாக ( Partitions) பிரித்து வையுங்கள்.ஒன்றில் சிஸ்டம் பைல்களும் மற்றையதில் அப்பிளிகேஷன் பைல்களையும் இன்ஸ்ரோல் பண்ண முடியும்.
இவ்வாறான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உங்கள் கணனியை எப்போழுதும் வேகமாக வைத்திருக்க முடியும்

என்ன செய்யும் இந்த FUNCTION KEYS?

கணனி விசைப் பலகையின் மேல் வரிசையில் F1, F2 என பெயரிடப்பட்ட 12 விசைகள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இவை (Function Keys) பன்ங்ஷன் கீஸ் எனப்படுகின்றன. இந்த பன்ங்ஷன் விசைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தொழிற்பாடுகளைக் கொண்டுள்ளன.


இந்த பன்ங்ஷன் விசைகள் பயன்படுத்தப்படும் இயங்கு தளத்திலும் எப்லிகேசன் மென்பொருளிலுமே சார்ந்திருக்கின்றன. அதாவது இவை எல்லா எப்லிகேசன்களிலும் எல்லா இயங்கு தளங்களிலும் ஒரே மாதிரியாகத் தொழிற்படுவதில்லை. அதேவேளை சில விசைகள் சில எப்லிகேசன்களில் தனியாக தொழிற்படுவதோடு வேறு சில விசைகள் ALT மற்றும் CTRL விசைகளோடு சேர்த்தே இயக்கப்படும். உதாரணமாக விண்டோஸ் இயங்கு தளத்தில் ALT + F4 விசைகளை அழுத்துவதன் மூலம் இயக்கத்திலிருக்கும் ஒரு எப்லிகேசனை நிறுத்திவிட முடியும்.

விண்டோஸ் இயங்கு தளத்தில் மேலே குறிப்பிட்டது போல் எல்லா எப்லிகேசன்களும் பங்ஷன் விசைகளை ஆதரிப்பதில்லை. அதேவேளை சில விசைகள் எந்த செயற்பாடுகளும் வழங்கப்படாமலும் உள்ளன.

பங்க்ஷன் விசைகளில் சில பொதுவான தொழில்கள் கீழே விவரிக்கப்படுகின்றன.


F1
இந்த விசை அனேகமாக எந்த எப்லிகேசனிலும் அதற்குரிய உதவிக் குறிப்புகளடங்கிய பைலை வரவழைக்கும். அதேவேளை எந்த எப்லிகேசனும் திறக்கப்படாத நிலையில் இந்த விசையை அழுத்தும் போது விண்டோஸ¤க்குரிய ஹெல்ப் பைல் திறந்து கொள்ளும். எம். எஸ். வர்ட்டில் இந்த விசையை அழுத்த டாஸ்க் பேன் (Task Pane) திறந்து கொள்ளும் அதிலிருந்து உதவிகள் பெறலாம்.


F2
விண்டோஸில் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு பைலின் அல்லது போல்டரின் பெயரை மாற்ற (rename) இந்த விசை பயன்படும். எம். எஸ். வர்டில் Alt + Ctrl + F2 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்தும் போது open டயலொக் பொக்ஸ் திறக்கும்.



F3
இதனை அழுத்தும் போது கணினியில் பைல் போல்டர்களைத் தேடித்தரும் Search விண்டோ திறந்து கொள்ளும். எம். எஸ். வர்டில் Shift + F3 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் வாக்கியமொன்றின் ஆரம்பத்தில் ஆங்கில பெரிய எழுத்தில் (upper case) உள்ளதை சிறிய எழுத்தாகவும் (lower case) சிறிய எழுத்திலுள்ளதை பெரிய எழுத்தாகவும் மாற்றிக்கொள்ளலாம்.


F4
விண்டோஸில் எந்த தொழில்பாடையும் செய்வதில்லை. எம். எஸ். வர்டில் இறுதியாகச் செய்த வேலையை மறுபடி செய்யும் Alt + F4 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் தற்போது இயக்கத்திலிருக்கும் எப்லிகேசனை நிறுத்தி விடலாம். எப்லிகேசன் எதுவும் திறந்திறாத நிலையில் Alt + F4 விசைகளை அழுத்தி விண்டோஸ் இயக்கத்தையும் நிறுத்த முடியும்.


F5
விண்டோஸில் இந்த விசையை அழுத்தி ஒரு விண்டோவின் உள்ளடக்கத்தை Refresh செய்து புதுப்பிக்கலாம். அனேகமான வெப் பிரவுஸர்களில் ஒரு இணைய பக்கத்தைப் புதுப்பிக்கவும் இந்த விசையே பயன்படுகிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட பக்கத்தை மறுபடி ஆரம்பத்திலிருந்து தோன்றச் செய்யலாம். எம். எஸ். வர்டில் இந்த விசை அழுத்தி Find & Replace டயலொக் பொக்ஸை வரவழைக்கலாம். எம். எஸ். பவர் பொயிண்டில் இந்த விசையை அழுத்தி ஸ்லைட் ஷோவை இயக்க முடியும்.


F6
இண்டர் நெட் எக்ஸ்ப்லோரர் மற்றும் மொஸில்லா பயபொக்ஸ் பிரவுசர்களில் கர்சரை எட்ரஸ் பாரை நோக்கி நகர்த்தலாம் Ctrl + Shift + F6 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் திறந்து வைத்துள்ள எம். எஸ். வார்ட் ஆவணங்களில் மாறிக்கொள்ள


F7
எம். எஸ். வர்ட் மற்றும் பவர்பொயின்ட் மென் பொருள்களில் எழுத்துப் பிழைகளையும் இலக்கணப் பிழைகளையும் கண்டறிந்து சரி செய்யக் கூடிய டயலொக் பொக்ஸ் தோன்றும்.


F8
இந்த இசையை விண்டோஸ் இயங்க ஆரம்பிக்கும் முன்னர் அழுத்துவதன் மூலம் விண்டோஸ் ஸ்டாட்-அப் மெனுவை வரவழைக்கலாம். விண்டோஸ் ஆரம்பிப்பதில் சிக்கல் தோன்றும் போது அதனை சேப் மோடில் (Safe Mode) இயக்க இந்த விசையே பயன்படுத்தப்படுகிறது-


F9
இந்த விசையை அழுத்தும் போது விண்டோஸில் எந்த இயக்கமும் நடைபெறாது.


F10
விண்டோஸில் திறந்திருக்கும் எந்த எப்லிகேசனிலும் மெனுபாரை இயக்க நிலைக்கு மாற்றி (activate) அதன் மூலம் கீபோர்டைக் கொண்டே மேலும் தெரிவுகளை மேற்கொள்ளலாம். அத்தோடு Shift + F10 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் ரைட் க்ளிக் செய்யும் போது தோன்றும் கண்டெக்ஸ்ட் மெனுவை வரவழைக்கலாம்.


F11
அனேகமான இணையை உலாவிகளில் (வெப் பிரவுஸர்) முழுத் திரையைத் தோன்றச் செய்யும்.


F12
எம். எஸ். வர்டில் ஷிavலீ as விண்டோவை வர வழைக்கும். அத்தோடு Shift + F12 விசைகளை அழுத்தும் போது வர்டில் ஆவணமொன்று சேமிக்கப்படும். Ctrl + Shift + F12 விசைகளை அழுத்தி Print டயலொக் பொக்ஸை வரவழைக்கும்.

விண்டோஸில் எல்லா பங்க்ஷன் விசைகளும் பயன்படுவதில்லை என்பதை இப்போது நீங்கள் புரிந்திருக்கலாம். (உதாரணம் F9) எனவே இதனை சாதகமாகப் பயன்படுத்தி நீங்கள் விரும்பும் ஒரு எப்லிகேசனுக்கு அந்த விசையை ஒதுக்கிவிட முடியும். அதன் மூலம் குறிப்பிட்ட அந்த பங்ஷன் விசையை அழுத்தி ஒரு எப்லிகேசனைத் திறந்து கொள்ளலாம். அதற்குப் பின்வரும் வழிமுறைகளைக் கையாளுங்கள்.

டெஸ்க் டொப்பில் அல்லது ஸ்டார்ட் மெனுவில் இருக்கும் நீங்கள் விரும்பிய எப்லிகேசனுக்குரிய ஐக்கன் மேல் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் Properties தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்று டயலொக் பொக்ஸில் Shortcut டேபில் க்ளிக் செய்யுங்கள். அங்கு Shortcut Key எனுமிடத்தில் நீங்கள் விரும்பிய பங்க்ஷன் கீயை அழுத்தி ஒகே செய்து விடுங்கள்

உங்கள் போட்டோவை அழகு செய்ய இதோ 10 இனணயதளங்கள்...........

Photoshop இல் நாங்கள் ஒரு வித்தியாசமான effect ஒன்றை நமது புகைப்படத்துக்கு கொடுக்க நாம் அதிக நேரத்தை செலவழிக்க வேண்டி வரும். அதோடு அந்தமாதிரியான விடயங்கள் Photoshop இல் கைதேந்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம். Photoshop என்றாலே என்ன்ன என்று தெரியாதவர்கள் கூட Funny Image Effect செய்யக்கூடியவாறு நிறுவப்பட்டுள்ள தரமானதும்
முதன்மையானதுமான (என் பார்வையில் ) இணையதளங்களை உங்களுக்கு தெரியபடுத்த விருபுகிறேன். இலகுவாக உங்களுக்கு பிடித்த effect ஐ தெரிவு செய்யுங்கள். உங்கள் புகைபடத்தை upload செய்யுங்கள் . அவளவுதான்.
முதன்மையானதுமான (என் பார்வையில் ) இணையதளங்களை உங்களுக்கு தெரியபடுத்த விருபுகிறேன். இலகுவாக உங்களுக்கு பிடித்த effect ஐ தெரிவு செய்யுங்கள். உங்கள் புகைபடத்தை upload செய்யுங்கள் . அவளவுதான்

Funny.Pho.to * Over 300+ Effects

PhotoFunia

Fun4ToBox

PicaritA

Photo505

LoonaPIX

DumPr

WriteOnIt

ImageChef

FaceinHole

என்ன இந்த System Bus ?

BY-IRENUJAN
கணினி மதர்போர்டில்ஒரு பகுதியிலிருந்து மற்றுமொரு பகுதிக்கு டேட்டாவைக் கடத்தும் பாதையையே பஸ் எனப்படுகிறது. இந்தப் பாதை மதர்போடிலுள்ள பிற பகுதிகளை சீபியூவுடனும் நினைவகத்துடனும் இணைக்கிறது.

இதனை இண்டர்னல் பஸ்(internal bus) எனவும் அழைக்கப்படும். அதேபோல் எக்ஸ்பேன்சன் பஸ் (expansion bus) எனற பகுதியும் உண்டு. இது சவுண்ட் காட், வீஜிஏ காட், மோடெம் போன்ற எக்ஸ்பேன்சன் போர்டுகள் சீபியூ மற்றும் நினைவகத்தை அணுகுவதற்கான பாதையாகும்.
இந்த இரு வகை பஸ்களும். எட்ரஸ் பஸ்(address bus)டேட்டா பஸ் (data bus)என இரு பகுதிகளைக் கொண்டிருக்கும். டேட்டா பஸ் என்பது டேட்டாவைக் கடத்தும் அதே வெளை எட்ரஸ் பஸ் எனப்படுவது டேட்டா எப்பகுதிக்குச் செல்ல வேண்டும் என்பதைக் காட்டுகிறது.
பஸ்ஸின் அளவை அதன (width)அகலம் எனப்படும். ஒரே நேரத்தில் எவ்வளவு டேட்டாவைக் அனுப்ப முடியும் என்பதை இந்த பஸ் வித் தீர்மானிக்கிறது. உதாரணமாக 16 பிட் பஸ்ஸானது 16 பிட் கொண்ட டேட்டாவை கடத்தக் கூடியது.
ஒவ்வொரு பஸ்ஸும் இயங்கும் வேகத்தைkக்லொக் ஸ்பீட் (clock speed) எனப்படும். இது மெகா ஹேட்ஸில் இல் அளவிடப்படும். அதிக வேகம் கொண்ட பஸ் மூலம் விரைவாக டேட்டாவைக் கடத்த முடியும். அதன் காரணமாகஒரு அப்லிகேசன் வேகமாக இயங்கும்

Saturday, July 30, 2011

பைல்களை அழிக்க முடியவில்லையா!

ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து கொள்ளும். பைலை அழிக்க முடியாது (“Cannot Delete File”) என்று அதிரடியாகத் தகவல் தரும்.


அது ஒரு டாகுமெண்ட் பைலாகவோ அல்லது மியூசிக் மற்றும் பட பைலாகவோ இருக்கலாம். என்ன இது இவ்வாறு எதிர்வாதம் செய்கிறது? என்று எண்ணி மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்வோம்; ஆனால் மீண்டும் மீண்டும் அதே செய்திதான் வரும்.

சில வேளைகளில் காரணங்களும் காட்டப்படும். ஹார்ட் டிஸ்க்கில் போதுமான இடம் இல்லை. அதனால் அழிக்க முடியவில்லை என்று காரணம் கிடைக்கலாம். இது இன்னும் அதிகமான குழப்பத்தில் உங்களை சிக்க வைக்கும். ஏனென்றால் அதிக இடம் வேண்டும் என்பதற்காகத்தானே நீங்கள் பைலை அழிக்க முயற்சிக்கிறீர்கள். சில பைல்களுக்கு இந்த பைலை இன்னொருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அல்லது இன்னொரு புரோகிராம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் அழிக்க முடியாது என்று காரணம் வரலாம்.
எனவே அழிப்பதாக இருந்தால் அந்த பைலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் புரோகிராமை முதலில் நிறுத்து என்று செய்தி கிடைக்கும். இப்ப என்னதான் செய்றது? என்ற பெரிய கேள்விக் குறியுடன் நீங்கள் மானிட்டரைப் பார்த்துக் கொண்டு அமர்ந்துவிடுவீர்கள், இல்லையா? கீழே சில டிப்ஸ்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் இந்த பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்.

முதலில் நீங்கள் அழித்திட எண்ணும் பைல் கம்ப்யூட்டரில் எங்கே உள்ளது என்று சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக “myessay. txt” என்னும் பைல் என்னும் போல்டரில் இருக்கலாம். இதனுடைய சரியான முகவரி C:Documents and Settings User Name My Documents என்பது. பைலின் பெயரையும் இந்த முகவரியையும் ஒரு பேப்பரில் குறித்துக் கொள்ளுங்கள்.

இனி கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடுங்கள். கம்ப்யூட்டர் பூட் ஆகும் போது எப்8 கீயை அழுத்துங்கள். அப்போது திரையில் Advanced Boot Options Menu மெனு கிடைக்கும். அந்த மெனுவில் Safe Mode with Command Prompt என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இனி டாஸ் ப்ராம்ப்ட்டில் கம்ப்யூட்டர் பூட் ஆகி நிற்கும். இனி டாஸ் மோடில் துடிக்கும் புள்ளியில் cd C:Documents and SettingsYour NameMy Documents என டைப் செய்திடவும் இதில cd என்பது Change Directory என்பதைக் குறிக்கிறது.

டைப் செய்து என்டர் அழுத்தியவுடன் டாஸ்கர்சர் உங்கள் பைல் உள்ள டைரக்டரியில் சென்று நிற்கும். இனி del myessay.txt என டைப் செய்து என்டர் தட்டினால் நீங்கள் பல வழிகளில் டெலீட் செய்திட முயன்று தோற்றுப் போன பைல் இப்போது நீக்கப்பட்டுவிடும். அப்பாடி! கம்ப்யூட்டர் உங்களுக்குக் கொடுத்த சவாலில் வெற்றி பெற்றுவிட்டீர்களா! சந்தோஷமா!!

மின்னஞ்சல் முகவரியில் "@" என்ற சின்னம் எப்படி வந்தது...?

ஒவ்வொருவருடைய மின் அஞ்சல் முகவரியிலும் "@" என்ற சின்னம் வருவது யாவரும் அறிந்ததே. இந்தச் சின்னம் எப்படிப் புழக்கத்தில் வந்தது?மின் அஞ்சல் முகவரியில் முதன் முதலாக இந்த @ சிம்னத்தை உபயோகித்தது "ரே டாம்லின்ஸன்" (Ray Tomlinson) என்னும் ஒரு கம்ப்யூட்டர் பொறியாளர்.
இவர் 1971ஆம் ஆண்டு முதலில் தனக்குத் தானே ஒரு மின் அஞ்சலை இந்தச் சின்னத்தை உபயோகித்து அனுப்பிக்கொண்டார்.
ஏன் இவர் இந்தச் சின்னத்தை தேர்ந்தெடுத்தார்? அவர் சொல்கிறார், " கீ போர்டில் அக்கரையுடன் பார்த்தேன் எவருடைய பெயரிலிலும் வராததும், குழப்பம் விளைவிக்காததுமாக சின்னம் இருக்கிறதா என்று, பின் இதைத் தேர்ந்தெடுத்தேன்." என்று சொன்னார்.

இந்த @ சின்னம் கம்ப்யூட்டர் கீ போர்டில் எப்படி இடம் பெற்றது? மொழி வல்லுனர்கள், எப்படி என்பதில், ஒத்துப்போகவில்லை. சிலர் நினைத்தனர், மத்திய காலத்தில் (Early Middle ages), துறவிகள் கையெழுத்துப் ப்ரதிகளை சிரமத்துடன் படிக்கும்பொழுது லத்தீன் மொழி வார்த்தை "ad", "at" or "towards" or "By" என்று பல அர்த்தங்களைக் கொண்டிருப்பதைக் கண்டனர்.
அநேக வல்லுனர்கள் இந்த @ சின்னம் சமீப காலத்தில், அதாவது 18ஆம் நூற்றாண்டில் புழக்கத்திற்கு வந்ததுதான், பொருட்களின் விலையை குறிப்பிட ஏற்பட்டதுதான் என்று வாதாடினர். அதாவது உதாரணமாக 10 பென்சுக்கு 5 ஆப்பிள் ("5 apples @ 10 pence." ).மற்றும் ஒரு மொழி வல்லுனர், ஆராய்ச்சியாளர் Denis Muzerelle சொல்கிறார், இது ஃப்ரெஞ்ச், ஜெர்மானிய, வியாபாரிகள் எழுத்து "a"யை வேகமாக உச்சரிக்கும் பொழுது ஏற்பட்ட திரிபு என்கிறார்.
ஆனால் ஜூலை மாதம் 2000 ஆண்டில் இத்தாலிய ஆரய்ச்சியாளர் ஒருவர், இந்த சின்னம் @ 14ஆம் நூற்றாண்டின் வியாபார தஸ்தாவேஜுகளில் இந்தக் குறி காணப்படுவதைக் கண்டுபிடித்தார். இந்தச் சின்னம் ஒரு அளவை the "anfora," or jar குறிக்க உபயோகிக்கப்பட்டது என்றார்.
Giorgio Stabile 1492ஆம் வருடத்திய லத்தீன் - ஸ்பானிஷ் அகராதியில் "anfora" என்பது "arroba" ( ஒரு நிறுவளளவை) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடித்தார். ஆகையால், 1885ல் வியாபரரீதியான "a" (the "commercial a") முதல் மாடலான அண்டர்வுட் தட்டச்சு மெஷினில் சேர்க்கப்பட்டது இயற்கையே.
80 வருடங்களுக்குப் பிறகு அங்கிருந்து ஸ்டாண்டெர்ட் கம்ப்யூட்டர் கேரக்டரில் (Such as ASCII) இடம் பெயர்ந்துவிட்டது. (It's therefore natural that, in 1885 the "commercial a" was included on the keyboard of the first model of Underwood typewriter and from there migrated into the standard set of computing characters (such as ASCII) 80 years later. )
தற்போதைய பிரச்சனை இந்த @ சின்னத்தை எப்படி உச்சரிப்பது? ஸ்பானியர்கள் இதை "arroba" என்றும், ஃப்ரெஞ்ச்காரர்கள் "arobase." என்றும், அமெரிக்கர்களும், பிரிட்டிஷாரும் "at-sign." என்றும், ஜெர்மானியர் ("at-Zeichen"), என்றும், எஸ்தோனியர் ("ஐt-mஐrk") என்றும், ஜப்பானியர் ("atto maak"). என்றும் உச்சரிக்கிறார்கள்.

ஆயினும், அதிகமான பாஷைகளில், இந்த சின்னம், பலதரப்பட்ட உருவகம், பொதுப்படையாக, பிராணிகளுக்கு ஒப்பிட்ப்படுகிறது. ஜெர்மானியர், ஃபின்ஸ், ஹங்கேரியன், போல்ஸ், தெற்கு ஆப்பிரிக்கர்கள், இந்தச் சின்னத்தைக் குரங்க்கின் வாலாகப் பார்க்கிறர்கள். மற்றும் சிலர் நத்தைக்கு ஒப்பிடுகிறார்கள். இப்படியாகப் பலவிதம்.
"However, in most languages the sign is described using a wide spectrum of metaphors lifted from daily life. References to animals are the most common. Germans, Dutch, Finns, Hungarians, Poles and South Africans see it as a monkey tail. The snail - oddly enough for the anti-snail-mail set - portrays the @ sign not only in French ("petit escargot") and Italian ("chiocciola"), but also in Korean and Esperanto ("heliko"). Danes and Swedes call it "snabel-a" - the "a" with an elephant's trunk; Hungarians a worm; Norwegians a pig's tail; Chinese a little mouse; and Russians a டாக்"
உணவு வகைகளும் இதற்கு உருவகம் தந்துள்ளன.

Multi Skype Launcher: ஒரே நேரத்தில் பல ஸ்கைப் கணக்குகளை பயன்படுத்த

ஸ்கைப் சேவையை உலகெங்கும் பலர் இணைய வழியாக பேசுவதற்கும் வீடியோ காலிங் செய்வதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவை Voive Over IP என்ற தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது. இதன் மூலம் ஸ்கைப் பயனர்கள் மற்ற ஸ்கைப் பயனர்களுக்கு இலவசமாகப் பேச முடியும். தொலைபேசி மற்றும்
  வேறு அழைப்புகளுக்கு கணக்கிலிருந்து பிடித்துக் கொள்வார்கள். தற்போது இந்த சேவையை மைக்ரோசாப்ட் 8.5 பில்லியன் டொலர்களுக்கு வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை தற்போது 663 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆனால் இந்த சேவையில் ஒரு நேரத்தில் ஒரு பயனர் கணக்கைத் தான் பயன்படுத்த முடியும். உங்களுக்கு ஒரே நேரத்தில் பல ஸ்கைப் கணக்குகளில் நுழைய வேண்டும் என ஆசைப்பட்டால் ஒரு இலவச மென்பொருள் உதவுகிறது. அதன் பெயர் Multi Skype Launcher.
இந்த மென்பொருள் மூலம் ஒரே கணணியில் பல ஸ்கைப் கணக்குகளில் நுழைந்து பல நண்பர்களிடம் பேச முடியும். இந்த மென்பொருளைத் தரவிறக்கியதும் நிறுவி விட்டு தங்களது கணக்கில் முதலில் நுழையவும்.
பின்னர் ADD என்பதைக் கிளிக் செய்து தங்களின் பல கணக்குகளைச் சேர்த்துக் கொண்டு பயன்படுத்தலாம். வெறும் 1.7 Mb அளவே உடைய இலவச மென்பொருளாகும்.

Friday, July 22, 2011

கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள்

இன்று நீங்கள் கூகுள் தேடல் பொறியை உபயோகப்படுத்தும் போது கீழ் காட்டப்படுள்ளவாறு ஓர் எச்சரிக்கை செய்தி தோன்றினால் உங்கள் கணனி ‘மெல்வெயாரி’னால் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். இதனைத் தெரிவித்தது நாங்கள் அல்ல கூகுள்.  ஆம், உங்கள் கணனி பாதிக்கப்பட்டதுள்ளதினையே கூகுள் இதன் மூலம் உறுதிப்படுத்துகின்றது.  இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்ட போலியான ‘அண்டி வைரஸ்’ மென்பொருட்களே உங்கள் கணனி பாதிக்கப்பட பிரதான காரணமென கூகுள் தெரிவிக்கின்றது.  மைக்ரோசொப்டின் விண்டோஸ் இயங்குதளத்தினைக் கொண்ட கணனிகளையே ‘மெல்வெயார்’ தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக கூகுள் தெரிவிக்கின்றது.
இவ்வாறான தகவல் தோன்றினால் உங்கள் கணனியை உடனே பரீட்சிக்குமாறும் தேவையானால் சம்பந்தப்பட்ட விபரங்கள் மற்றும் ஆலோசனைகளை கூகுளிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அது குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களைக் கூகுளின் வலைப்பூவில் தெரிந்துகொள்ளலாம்.

Thursday, July 21, 2011

தண்ணீரில் கைத்தொலைபேசி விழுந்தால்.....

நாம் அடிக்கடி செய்திடும் ஒரு காரியம் நம் கைத்தொலைபேசியை தண்ணீரில் போடுவது. குளியலறைகளுக்கும் எடுத்துச் செல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறோம்.
அவ்வாறு விழுந்த பின் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள்:
1.முதலாவதாக போனில் எதனை எல்லாம் பிரித்து எடுத்து வைக்க முடியுமோ அவற்றை எல்லாம் பிரித்து எடுத்திடவும். கைத்தொலைபேசி கவர், பற்றரி கவர், பற்றரி, சிம் கார்ட், மெமரி கார்ட் ஆகியவை இதில் அடங்கும்.
2. அடுத்து கைத்தொலைபேசியில் எங்கெல்லாம் தண்ணீர் இருக்கும் என்று எண்ணுகிறீர்களோ அங்கு சிறிய மெல்லிய துணி, அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு சுத்தம் செய்து நீரை உறிஞ்சி எடுக்கவும். முழுவதுமாக உலர செய்திடவும்.
3. ஹேர் ட்ரையர் ஒன்று இருந்தால் அதனை எடுத்து கைத்தொலைபேசியை மீதாகப் பயன்படுத்தி ஈரத்தை உலர்த்தவும். குறிப்பாக பற்றரி வைத்திடும் இடத்தில் உள்ள ஈரத்தை முழுமையாக நீக்கவும்.
இவ்வாறு உலர வைக்கையில் ஹேர் ட்ரையரை கைத்தொலைபேசிக்கு மிக அருகே கொண்டு செல்லக் கூடாது. அது கைத்தொலைபேசியின் சில பகுதிகளைப் பாதிக்கலாம். எனவே சற்று தள்ளி வைத்து 20 முதல் 30 நிமிடம் வரை இவ்வாறு உலர வைக்கும் வேலையை மேற்கொள்ளவும்.
இந்த வேலையை மேற்கொள்கையில் கைத்தொலைபேசியை வெவ்வேறு நிலையில் வைத்து உலர வைக்கவும். இதனால் வெவ்வேறு இடங்களில் ஒட்டியிருக்கும் ஈரம் வெளியேறி உலரும்.
இதே போல பற்றரி, சிம் கார்டு ஆகியவற்றில் உள்ள ஈரத்தையும் உலர வைக்கவும்.
நன்றாக உலர்ந்த பின்னர் காற்றோட்டமான இடத்தில் வெகுநேரம் வைத்த பின்னர் பற்றரி, சிம் ஆகியவற்றைப் பொருத்தி இயக்கவும். அப்போதும் சரியாக இயங்கவில்லை எனில் இன்னும் சில மணி நேரம் காத்திருந்து ஈரம் தானாக உலரும் வரைப் பொறுத்திருக்கவும்.
அதன் பின்னரும் இயங்கவில்லை எனில் கைத்தொலைபேசியை சரி செய்திடும் பணியாளரிடம் சென்று நீரில் விழுந்ததை மறைக்காமல் கூறி நீங்கள் மேற்கொண்ட செயல்களையும் கூறி சரி செய்திடச் சொல்லவும்.

Wednesday, July 20, 2011

கம்ப்யூட்டரை அடிக்கடி பயன்படுத்துபவரா நீங்கள்...

கணனியை அடிக்கடி பயன்படுத்துபவரா நீங்கள்...? நீங்கள் கட்டாயம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய சில shortcut keys தொகுப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன.
  CTRL+C (Copy): தேர்ந்தெடுத்த text, picture, files என எதனையும் காப்பி செய்திட. காப்பி செய்ததை அடுத்து எந்த இடத்திலும் எந்த பைலிலும் ஒட்டிக் கொள்ளலாம்.
 CTRL+X (Cut): தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட், படம், பைல் என எதனையும் நீக்கிட. நீக்கப்பட்டவை கிளிப் போர்டு மெமரியில் இருக்கும் அதனை பேஸ்ட் செய்து கொள்ளலாம்.
 CTRL+V (Paste): ஏற்கனவே தேர்ந்தெடுத்ததை, கட் செய்ததை பேஸ்ட் செய்திட இதற்குப் பதிலாக இன்ஸெர்ட் கீயையும் பயன்படுத்தலாம்.
 CTRL+Z (Undo): சற்று முன் மேற்கொண்ட செயலை மாற்றி பழைய நிலைக்குக் கொண்டு வர.
 DELETE (Delete): எதனையும் அழித்துவிட. இதனை மீண்டும் கொண்டு வர ரீசைக்கிள் பின்னில் தேட வேண்டும். தேடிப் பெறாமல் பேஸ்ட் செய்திட முடியாது.
 SHIFT+DELETE: நிரந்தரமாக அழித்துவிட இந்த கட்டளை மூலம் அழிக்கையில் அது ரீ சைக்கிள் பின்னுக்குப் போகாது.
 F2 Key: பைல் ஒன்றின் பெயரை மாற்றிப் புதிய பெயரிட.
 CTRL+RIGHT ARROW: ஒவ்வொரு சொல்லாக கர்சரைக் கொண்டு செல்ல.
 CTRL+UP ARROW: முந்தைய பாராவின் முதல் தொடக்கத்திற்குக் கொண்டு செல்ல.
 CTRL: இந்த கீயை அழுத்திக் கொண்டு மவுஸை இழுத்தால் அதில் அடைபடும் டெக்ஸ்ட் அல்லது படம் செலக்ட் செய்யப்படும்.
 CTRL+DOWN ARROW: அடுத்த பாராவில் தொடக்கத்திற்குக் கொண்டு செல்ல.
 SHIFT: இந்த கீயை அழுத்தியவாறே ஆரோ கீகளை அழுத்தினால் தொடர்ந்து கூடுதலாக வரிகளோ, எழுத்தோ பாராவோ செலக்ட் ஆகும்.
 ஒரு சிடி அல்லது டிவிடியை அதன் ட்ரேயில் செலுத்திய பின் அதில் உள்ள ஆட்டோமெடிக் ஸ்டார்ட் அதனை இயக்கும். அந்த இயக்கத்தை நிறுத்த வேண்டுமாயின் இந்த கீயை சிடியை ட்ரேயில் வைத்து தள்ளிவிட்டபின் அழுத்திக் கொண்டிருக்க வேண்டும்.


CTRL+A: அனைத்தும் செலக்ட் செய்திட.


F3 Key: பைல் அல்லது போல்டரைத் தேட.


ALT+ENTER: தேர்ந்தெடுக்கப்பட்ட பைலின் புராபர்ட்டீஸ் விண்டோ காட்டப்படும். இதில் பைல் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.


ALT+F4: அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராமை மூடலாம்.


ALT+SPACEBAR: எந்த விண்டோ இயங்கிக் கொண்டிருக்கிறதோ அதற்கான ஷார்ட் கட் திறக்கப்படும்.


CTRL+F4: ஒரே நேரத்தில் பல டாகுமெண்ட்களைத் திறந்து பணியாற்றிக் கொண்டிருக்கையில் நீங்கள் அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் பைலை மூடுவதற்கு உதவும்.



ALT+TAB: திறந்திருக்கும் புரோகிராம்களில் ஒவ்வொன்றாகச் செல்ல உதவும். எந்த புரோகிராம் தேவையோ அதில் கர்சரை நிறுத்தி என்டர் செய்தால் அந்த புரோகிராம் திறக்கப்படும்.
  ALT+ESC: டாஸ்க் பாரில் திறக்கப் பட்டுள்ள புரோகிராம் டேப்களில் ஒவ்வொன்றாகச் செல்லும். தேவையான புரோகிராம் தேர்ந்தெடுக்கப்படுகையில் கிளிக் அல்லது என்டர் செய்தால் அந்த புரோகிராமில் உள்ள பைல் ஸ்கிரீனில் காட்டப்படும்.
 
CTRL+ESC : ஸ்டார்ட் மெனு திறக்க.

F10 Key: ஒரு மெனுபாரினை இந்த Key இயக்கத் தொடங்கும்.

ESC: அப்போதைய செயல்பாட்டினைக் cancel செய்திடும்.

ட்ரைவர் அப்டேட்

விண்டோஸ் ட்ரைவர்களை அப்டேட் செய்ய ஏற்கனவே என்னுடைய வலைப்பூவிலேயே இரண்டு மென்பொருள்களை உங்களுடன் பகிர்ந்து இருக்கிறேன். இதோ மற்றுமொரு ட்ரைவர் அப்டேட் மென்பொருள் உங்களுக்காக Smart Driver Updater இந்த மென்பொருள் மூலம்
 இணையத்தின் உதவியுடன் ட்ரைவர்களை அப்டேட் மற்றும் புதியதாகவும் நிறுவிக்கொள்ள முடியும். மேலும் இந்த Smart Driver Updater உதவியுடன் ட்ரைவர்களை பேக்அப் மீண்டும் கணினியில் நிறுவிக்கொள்ள முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி

இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் Start Scan என்னும் பொத்தானை அழுத்தி கணினியில் உள்ள ட்ரைவர்களை ஸ்கேன் செய்யவும். தற்போது விடுபட்ட ட்ரைவர்களை பட்டியலிடும்.

பின் வேண்டிய ட்ரைவர்களை இணையத்தின் உதவியுடன் உங்கள் கணினியில் அப்டேட் செய்து கொள்ளவும். வேண்டுமெனில் ட்ரைவர்களை பேக்அப் செய்து கொள்ளவும் முடியும்.

இந்த மென்பொருள் மூலம் பேக்அப் செய்து மீண்டும் ட்ரைவர்களை எளிமையாக நிறுவிக்கொள்ள முடியும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும்.