Sunday, November 27, 2011

கணணிக்கு புதியவரா நீங்கள்!

AIR vision

file உருவாக்கிப் பாதுகாப்பது எப்படி?
கம்ப்யூட்டரை இப்போதுதான் பயன்படுத்தத் தொடங்கி உள்ளீர்களா? அப்படியானால் நீங்கள் முதலில் கற்றுக் கொள்ள வேண்டியது அதில் எப்படி பைல்களை உருவாக்கி, சேவ் செய்வது என்பதுதான்.
கம்ப்யூட்டரில் பதிந்து வைக்கப்படும் ஒவ்வொன்றும், அது டாகுமெண்ட் எனப்படும் ஆவணம், படம், பாட்டு, விளையாட்டு இப்படி எதுவாக இருந்தாலும், அது ஒரு பைலாக சேமிக்கப்பட்டு பதியப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பைலை அதற்கான புரோகிராம் தான் திறந்து காட்ட முடியும். எடுத்துக் காட்டாக டாகுமெண்ட் பைல் ஒன்றை படத்திற்கான கிராபிக்ஸ் புரோகிராம் திறந்து படிக்க இயலாது. மியூசிக் புரோகிராம் ஒன்றினால் டாகுமெண்ட் பைல் ஒன்றைத் திறந்து பார்க்க முடியாது. ஒவ்வொரு புரோகிராமிற்கும் அது எந்த பைலைத் திறந்து இயக்க முடியும் என்பது புரோகிராமிங் செய்யப்பட்டு அறிந்து கொள்ளும் வகையில் காட்டப்பட்டிருக்கும். அதாவது ஒவ்வொரு பைலும் குறிப்பிட்ட பைல் டைப் வகையினைச் சேர்ந்தது என்பதனை அறிந்து கொள்ளலாம். இதனை அறியும் இடம் அந்த பைலின் பெயரை அடுத்து உள்ள முற்றுப் புள்ளியைக் கடந்து எழுதப்படும் எண்கள் அல்லது எழுத்துக்களைக் கொண்ட இடம் தான். எடுத்துக் காட்டாக ‘myletter.doc’ ’என்பது ஒரு பைலின் பெயர். இதில் முதலில் உள்ள myletter என்பது பைலின் பெயர்; doc என்பது அந்த பைல் எத்தகையது என்பதனைக் கூறும் பெயர். இதன் பொருள் என்னவென்றால் இந்த பைலைத் திறக்க doc என்பதைப் புரிந்து கொள்ளும் மைக்ரோசாப்ட் வேர்ட் போன்ற புரோகிராம் வேண்டும் என்பதே. புரோகிராம் என்று எடுத்துக் கொண்டால் அதில் பல வகையான பைல்கள் அடங்கியிருக்கலாம். இன்றையக் கம்ப்யூட்டர்களில் ஆயிரக்கணக்கான பைல்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் பல இடங்களில் பரவி பதியப்பட்டுக் கிடக்கின்றன. இவ்வாறு பரவிக் கிடக்கும் பைல்களை ஒழுங்குபடுத்த போல்டர்கள் (Folders) உதவுகின்றன. எனவே புரோகிராம் ஒன்றின் அனைத்து பைல்களும் ஒரு போல்டரில் இருந்தால் அவற்றை அடையாளம் காண்பது எளிது. போல்டர் ஒன்றின் உள்ளே மேலும் பைல்கள் அடங்கிய துணை போல்டர்கள் (‘subfolders’) இருக்கலாம். எடுத்துக் காட்டாக உங்கள் நிறுவனம் அல்லது அலுவலகம் சார்ந்த பைல்களை Office என்னும் போல்டரில் வைத்திருக்கலாம். இதன் உள்ளே அலுவலர்கள், ஊதியம், போனஸ் என்பது போன்ற பல துணை போல்டர்கள் இருக்கலாம். போல்டர் ஒன்றை நீங்களே உருவாக்கலாம்; குறிப்பிட்ட போல்டர்களை எளிதாகக் கண்டறிய ஷார்ட் கட் வழிகளையும் நீங்களே உருவாக்கலாம். இதற்கு எடுத்துக் காட்டாக ஒன்றைப் பார்க்கலாம். உங்கள் டெஸ்க் டாப்பில் (My Documents) என்ற ஷார்ட்கட் உடன் கூடிய ஐகான் இருக்கும். இதன் மீது மவுஸைக் கொண்டு இருமுறை கிளிக் செய்தால் My Documents என்னும் போல்டரில் உள்ள மற்ற போல்டர்களையும் பைல்களையும் காணலாம். My Documents என்பது உங்களுக்காகத் தானாக உருவாக்கப்பட்ட பெரிய போல்டராகும். நீங்கள் உருவாக்கும் அனைத்து பைல்களையும் பிரித்து பல குழுக்களாக வைத்திட மை டாகுமெண்ட்ஸ் உதவுகிறது. எடுத்துக் காட்டாக மை டாகுமெண்ட்ஸ் போல்டரிலேயே மைமியூசிக், மை பிக்சர்ஸ், மை வீடியோஸ் போன்ற சப் போல்டர்கள் நம் தேவைக்காகவே உள்ளன. ஆனால் நாம் உருவாக்கும் பைல்களைக் கட்டாயம் இதில் தான் சேமித்து வைக்க வேண்டியதில்லை. எந்த போல்டரில் வேண்டுமானாலும் போட்டு வைக்கலாம். பைல்களை எளிதில் பின்னர் தேடும் வகையில் போல்டர்களை உருவாக்கி அவற்றை எளிதாக அடையாளம் காணும் வகையில் பெயர் கொடுத்து வைக்கலாம். அதே போல தேவையற்ற போல்டர்களை அழித்துவிடவும் வேண்டும். இல்லை எனில் பைல்களே இல்லாத போல்டர்கள் இடத்தை அடைத்துக் கொண்டு இருக்கும்.
பைல்களைத் தேடும் வழிகள்: கம்ப்யூட்டரில் பைல்களைப் பல வழிகளில் தேடலாம். பலர் தங்கள் பைல்கள் எங்கிருக்கின்றன என அறியவும் அவற்றைத் திறக்கவும் மை கம்ப்யூட்டர் ஐகானைப் பயன்படுத்துகின்றனர். டெஸ்க் டாப்பில் இந்த ஐகான் மீது கிளிக் செய்தால் பைல்கள் பாதுகாத்து பதியப்பட்டு இருக்கும் பல்வேறு இடங்கள் காட்டப்படும். இதில் ‘C’ டிரைவ் மீது கிளிக் செய்தால் உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் உள்ள அனைத்து பைல்களும் அல்லது அவை இருக்கும் போல்டர்களும் காட்டப்படும். வேறு எக்ஸ்ட்ரா டிரைவ் இல்லை என்றால் இதில் மட்டுமே பைல்களும் போல்டர்களும் இருக்கும். ஆனால் ‘C’ தவிர ‘D’, ‘E’, ‘F’ என டிரைவ்கள் இருப்பின் அந்த எழுத்துக்கள் மீது கிளிக் செய்து அந்த அந்த டிரைவில் உள்ள போல்டர்களையும் பைல்களையும் காணலாம். ‘C’ டிரைவில் அனைத்து போல்டர்களும் காட்டப்பட்டாலும் ஒரு சில போல்டர்கள் நீங்கள் திறந்து பார்க்கக்கூடாத போல்டர்களாக இருக்கும். இவற்றை நீங்கள் திறக்க முயற்சிக்கையில் இந்த பைல்கள் இயக்கத்திற்கு ஆதாரமானவை; எனவே திறக்க முயற்சிப்பது சிக்கலை உண்டாக்கும் என்பது போன்ற எச்சரிக்கை செய்திகள் காட்டப்பட்டு அந்த போல்டர்கள் திறக்கப்படும். பொதுவாக இது போன்ற எச்சரிக்கை செய்திகள் வந்தபின்னர் திறக்கப்படும் போல்டர்களில் உள்ள பைல்களை எடிட் செய்திடக் கூடாது; அழிக்கவும் கூடாது. இவற்றில் புரோகிராம் பைல்கள் மற்றும் சிஸ்டம் பைல்கள் அடங்கிய போல்டர்களும் விண்டோஸ் போல்டர்களும் இருக்கும். இவை கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு மிக முக்கியமானவை. இவற்றை திறப்பதுவும் திருத்துவதும் கூடாது. விண்டோஸ் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் இயங்க, இவை அப்படியே பதிந்த நிலையில் இருப்பது அவசியம்.
பைல்களையும் போல்டர்களையும் காட்டும் விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறக்க விண்டோஸ் (Windows+E) கீகளை அழுத்தலாம். அல்லது Start பட்டனில் ரைட் கிளிக் செய்து அதில் மேல் எழும் மெனுவில் இரண்டாவதாக உள்ள பிரிவில் கிளிக் செய்யலாம்.
எல்லா பைல்களும் டிஸ்க் ஸ்பேஸ் எடுத்துக் கொள்கின்றன. நாம் ஹார்ட் டிஸ்க்கில் தானே எழுதுகிறோம். எனவே எந்த அளவு இடத்தை இவை எடுத்துக் கொள்கின்றன என்று தெரிந்து கொள்வது நல்லதுதானே. எவ்வளவு ஹார்ட் டிஸ்க் ஸ்பேஸை தற்போது உள்ள பைல்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றன? இன்னும் எவ்வளவு இடம் உள்ளது? என்று அறிந்து கொள்ள மை கம்ப்யூட்டரை டபுள் கிளிக் செய்த பின் டிரைவிற்கான எழுத்தில், எடுத்துக்காட்டாக சி:, டபுள் கிளிக் செய்திடாமல் ரைட் கிளிக் செய்திடுங்கள். இதில் கிடைக்கும் மெனுவில் கீழாக உள்ள புராபர்ட்டீஸ் என்பதில் கிளிக் செய்தால் டிஸ்க் வட்டவடிவமாகக் காட்டப்பட்டு அதில் பயன்படுத்தப்பட்ட இடமும் காலியாக உள்ள இடமும் காட்டப்படும். எவ்வளவு அளவு என்பது மேலாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். டிஸ்க்கில் இடம் குறைந்து அடுத்து வரும் பைல்களை எழுதுவது சிரமமாக இருக்கும் என்று எண்ணினால் உடனே தேவையற்ற பைல்களை நீக்கலாம். நீக்க வேண்டிய பைல்களை அடையாளம் கண்டு கொண்டால் அவை இருக்கும் டிரைவ் மற்றும் போல்டர் சென்று பைலின் மீது ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் Delete பட்டனை அழுத்தினால் பைல் அழிக்கப்படும். ஆனால் அவ்வாறு அழிக்கப்படும் பைல்கள் கம்ப்யூட்டரில் உள்ள ரீசைக்கிள் பின்னில் சென்று அமர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் தவறான பைலை அழித்துவிட்டு பின் மீண்டும் அதனை வேண்டும் என உணர்ந்தால் அதனை மீட்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லுமுன் இந்த பைலை அழிக்க வேண்டுமா? என்ற கேள்வி கேட்கப்பட்டு பின் தான் அந்த பைல் அழிக்கப்படும். அப்படியே அழிந்தாலும் அது ரீசைக்கிள் பின்னில் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் நாம் இடம் காலியாக வேண்டும் என்று அழிக்கையில் மீண்டும் அந்த பைலை ரீ சைக்கிள் பின்னில் வைத்திட வேண்டிய அவசியமில்லை. எனவே உடனே அதை அங்கிருந்தும் அழித்துவிடலாம். ரீசைக்கிள் பின் ஐகானை அழுத்தி கிடைக்கும் மெனு மூலம் பைலை அழிக்கலாம். அல்லது முதலில் பைலை அழிக்க முயற்சிக்கையிலேயே ஷிப்ட் கீ அழுத்தி டெலீட் கீ அழுத்தினால் பைல் ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லாமல் அழிக்கப்படும். ஆனால் இதனை நாம் திரும்பப் பெற முடியாது.

Wednesday, November 9, 2011

face book link!

www.facebook.com/irenujan

உங்கள் பேஸ்புக் கணக்கை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டறிய வேண்டுமா?

பேஸ்புக் முகப்பில் உங்களுக்கு தெரியாமல் வேறுயாரவது விடயங்களை பிரசுரிக்கிறார்களா? அல்லது நண்பர்கள் நீக்கப்படுகின்றனரா?
அண்மையில் பேஸ்புக் ஸ்தாபகரின் கணக்கே ஹேக் செய்யப்பட்டது நினைவிருக்கலாம். இவ்வாறு பேஸ்புக் கணக்கை வேறு யாரும் பயன்படுத்தினால் உடனடியாக உங்களுக்கு தெரியப்படுத்த என்ன செய்யலாம்?
இதற்கு பேஸ்புக்கில் பாதுகாப்பு வசதியொன்று உள்ளது. பேஸ்புக் லாகின் செய்து Facebook.com -> Account -> Account Settings -> Account Security செல்லுங்கள்.
பின்னர் அங்கு IP முகவரியை வைத்து பேஸ்புக் கணக்கு எங்கிருந்து கையாளப்படுகிறதென்ற விபரங்கள் காட்டப்படும். இதில் சந்தேகம் வரும்படியான இடங்கள் காட்டப்பட்டால் உடனடியாக அதை “end activity " செய்துவிடுங்கள்.
மேலதிக பாதுகாப்பு வசதியாக வேறு எங்கிருந்தாவது பேஸ்புக் கணக்கு அக்செஸ் செய்யப்பட்டால் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துமாறு கொடுத்து விடலாம். அல்லது உங்கள் கணக்குடன் மொபைல் எண்ணை இணைத்திருந்தால் எஸ்.எம்.எஸ் மூலம் அறிவிக்குமாறூம் செய்துவிடலாம்.
மேலுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு send me an email என்பதையும், மொபைல் வசதி இருந்தால் send me a text message என்பதையும் டிக் செய்து விட்டால் மின்னஞ்சலில் அல்லது எஸ்.எம்.எஸ்  இல் பேஸ்புக் கணக்கை வேறு இடத்திலிருந்து யாரும் அக்செஸ் செய்தால் அந்த தகவல்கள் தெரியப்படுத்தப்படும்.
A.IRENUJAN

Tuesday, August 9, 2011

நீங்கள் அனுப்பிய e-mail போய்ச் சேர்ந்ததா....?

நாம் அனுப்பிய இமெயில் சேர்ந்ததா? பெற்றவர் படித்தாரா என்பது கூட வேண்டாம். மெயில் அவருக்கு போய்ச் சேர்ந்ததா என்று பலருக்குக் கவலை இருக்கும். பொதுவாக அனுப்பப்படும் இமெயில்கள் நிச்சயம்யாருக்கு அனுப்புகிறோமோ அவருக்குப் போய் சேர்ந்து விடும்.தொழில் நுட்ப கோளாறின் காரணமாக அவ்வாறு அனுப்பப் பட முடியவில்லை என்றால் நமக்கு இந்த மெயில் இன்ன காரணங்களுக்காக அனுப்ப இயலவில்லை என்றோ அல்லது இரண்டு நாட்களாக இந்த மெயிலை அனுப்ப முயற்சித்தோம், முடியவில்லை என்றோ செய்தி வரும்.
ஆனால் போய்ச் சேர்ந்தது என்பதற்கான உறுதி செய்தி நமக்கு வந்தால் நன்றாக இருக்கும் அல்லவா? இதற்காகவே Read Receipt என்ற வசதியினை இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் வைத்துள்ளன. இந்த வசதியை ஒவ்வொரு இமெயிலுக்கும் செட் செய்து விட்டால் இமெயில் போய்ச் சேர்ந்தவுடன் அதனைப் பெறுபவருக்கு இதுபோல பெற்றுக் கொண்டதற்கான ரசீதினை அவர் கேட்கிறார்.
அனுப்பவா? என்று ஒரு செய்தி தரப்படும். அவர் ஓகே டிக் செய்தால் தானாக ரசீது நமக்குத் தயாராகி அனுப்பப்படும். இதனை எப்படி அவுட்லுக் எக்ஸ்பிரஸ்ஸில் செட் செய்வது என்று பார்ப்போம்.

  1. முதலில் மெயில் எழுத Create Mail அல்லது Compose Mail என்பதில் கிளிக் செய்திடவும்.
  2. பின் இமெயில் பெறுபவரின் முகவரி மற்றும் செய்தியை டைப் செய்திடவும்.
  3. இணைக்க வேண்டிய பைல்களை இணைக்கவும்.
  4. எல்லாம் முடிந்தவுடன் Tools மெனு செல்லவும். அங்கே Request Read Receipt என்பதில் கிளிக் செய்திடவும்.
  5. மெயிலை அனுப்பி விட்டால் அந்த மெயில் போய்ச் சேர்ந்தவுடன் பெற்றவர் பெற்றதற்கான செய்தியை அவுட்லுக் எக்ஸ்பிரஸ் உங்களுக்கு அனுப்பி வைக்கும்.
  6. மொத்தமாக நீங்கள் அனுப்பும் அனைத்து இமெயில்களுக்கும் ரசீது தேவை என்றால் Tools மெனு சென்று Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  7. பின் கிடைக்கும் விண்டோவில் Receipts என்ற டேபினைக் கிளிக் செய்திடவும். இதில் “Request a return receipt for all sent messages” என்ற ஆப்ஷனுக்கு முன்னால் உள்ள சிறிய பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இதன் பின் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு மெயிலும் திறந்து படிக்கப்பட்டதா என உங்களுக்கு செய்தி அனுப்பிக் கொண்டே இருக்கும்.

Monday, August 8, 2011

கணினி என்றால் என்ன...?

கணினி என்பது பல எலொக்ரொனிக் இளைகளினால் ஆன transistors, capacitors, diodes, resistors போன்றவற்றால் பல உறப்புகளை ஒன்றினைத்து உருவாக்கப் பெற்ற ஓர் எலெக்ரொனிக் இயந்திரம்
 
ஒபறேற்ரிங் சிஸ்ரம் என்னும் புறோகிறாம் மூலம் இயங்கச் செய்து,அதன் மூலம் ஒரு வேலையை துல்லியமாகவும், வேகமாகவும்; தன்னிச்சையாக செயல் பட்டு செய்விக்க கூடியதாக உருவாக்கப் பெற்ற ஒரு கருவியே கணினி என அழைக்கப் பெறுகின்றது.

  கணினியின் முழுச் செயற்பாட்டிற்கும் அதில் உட்புகுத்தப் பெற்றுள்ள ஒபறேற்ரிங் சிஸ்ரமே அடித்தளமாகவும், உந்துசக்தியாகவும் அமைந்து; எல்லா உறுப்புகளையும் ஒன்றாக இணைத்து இயக்குகின்றது.

அது Application Software ன் பாவனையின் போது அதனுடன் இணைந்து அது இயங்கும் மேடையாக அமைந்து தேவையான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்து, அவ்வப்போது அவற்றில் முன்கூட்டியே பதியப்பெற்றுள்ள உபதேசங்களிற்கு அமைய; கட்டளைகளையும், அறிவுறுத்தல்களையும் CPU க்கு வழங்குவது ஒபறேற்ரிங் சிஸ்ரமே.
 கணினிகளின் வகைகள்
 எல்லோருடைய எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் பலவித அளவுகளில் கணினிகள் உருவாக்கப் பெற்று, அவைகள் நான்கு வகைகளாக வகைப்படுத்தப் பெற்றுள்ளன.

 அவையாவன:
1. Personal -Computers;
Desktop – Pc
Tower – Pc
Laptop – Pc
Hand held – Pc
Network – Pc
PC – Personal Computer – பிரத்தியேக கணினி என பொருள்படும்


2. Mini – Computers:
இது ஒரு டிபாட்மென்ரில் பாவிப்பது. இதன் மூலம் நூற்றுக் கணக்கான கணினிகளை ஒன்றிணைது ஒன்றிற் கொன்று தொடர்புடன் ஒரே நேரத்தில் இயக்க முடியும்.

3. Mainfram – Computers:
பெரிய நிறுவனங்களில் பாவிப்பது. இதன் மூலம் பல ஆயிரம் கணினிகளை ஒன்றிணைது ஒன்றிற் கொன்று தொடர்புடன் ஒரே நேரத்தில் இயக்க முடியும்.

4. Super – Computers:
நாசா போன்ற பெரிய ஆராச்சி நிலையங்களில் பாவிப்பது. வேகத்தில் கூடியதும், மில்லியன் கணக்கான வேலைகளை ஒரு செக்கண்டில் செய்யக்கூடியது.
 
இந்த எலெக்ரொனிக் (System Unit) இயந்திரத்தை உடம்பு எனவும், அதனை இயக்கும் (Operating System) ஒபறேற்ரிங் சிஸ்ரம் எனும் புறோக்கிறாமை உயிர் எனவும் அழைப்பர். உயிர் புகுத்தப்பெறாவிடில் உடலான இயந்திரம் இயங்காது. இந்த இயந்திரத்தில் உள்ள உறுப்புகளை Hard Ware “வன் பொருள்” எனவும்; இதில் (Install) உள்ளூட்டல் செய்யப்பெற்ற Operating System த்தையும் Application software யும் Soft Ware “மென் பொருள்” எனவும் அழைப்பார்கள்.

 இந்த எலெக்ரொனிக் இயந்திரத்திற்கு மனித மொழி தெரியாது, ஆனால் மின்சாரம் பாயும் போது ”on” “1″ என்பதையும் மிசாரம் இல்லாத பொழுது ”off” “0″ என்பதனை மட்டும் உணரக்கூடியது. இதனை ஆதாரமாக வைத்தே இதனை இயக்கும் Soft Ware என்னும் மென்பொருள் Operating System எழுதப் பெற்று Install செய்கின்றார்கள். அதன் பின்னரே மனித மொழியை கணினி புரிந்து செயல்படுகின்றது. இந்த Soft Ware எழுதுவதற்கென்றே பல கணினி மொழிகள் உருவாக்கப் பெற்றுள்ளன (C++, Java, Pascal போன்றவை).

Sunday, August 7, 2011

டாக்குமெண்டுகளை வேர்டில் பாதுகாக்க.......

வேர்ட் புரோகிராம் தரும் ஒரு முக்கிய வசதி அதில் மாற்றங்களை ஏற்படுத்தி, மாற்றங்களாகவே வைத்திருந்து, அவற்றைத் தேவைப்பட்டால் மட்டுமே ஏற்றுக் கொள்வதாகும். ஒருவர் டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கிப் பின்னர் அதில் சில மாற்றங்களையும் ஏற்படுத்தலாம். 
ஏற்படுத்திய மாற்றங்களுடன், அந்த டாகுமெண்ட்டை, அலுவலகத்தில் உள்ள மற்றவர்களும் பார்க்கும் வகையில் அனுப்பலாம். ஆனால், தான் ஏற்படுத்திய மாற்றங்களை மற்றவர்கள், டாகுமெண்ட்டில் இணைக்கவோ அல்லது நீக்கவோகூடாது என விரும்பலாம்.
வேர்ட் புரோகிராமில், இது போல மாற்றங்களை, அதனை ஏற்படுத்தியவர் மட்டுமே, நீக்கி இணைக்க வசதி தரப்பட்டுள்ளது. வேர்டின் பல புரோகிராம்களில் இதனை எப்படி செயல்படுத்தலாம் என்று இங்கு காணலாம்.

வேர்ட் 2000 வரை பயன்படுத்துபவர்கள், கீழ்க்காணும் செயல்முறையை மேற்கொள்ள வேண்டும்.
1. சம்பந்தப்பட்ட டாகுமெண்ட்டினைத் திறந்து, Tools மெனு செல்லவும். வேர்ட் Protect Document டயலாக் பாக்ஸைக் காட்டும்.
2. இதில் Tracked Changes என்ற ஒப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இந்த டயலாக் பொக்ஸின் கீழாக பாஸ்வேர்ட் ஒன்றை அமைக்கவும்.
4. பின்னர் ஓகே அழுத்தவும்.
5. மீண்டும் கேட்கப்படும்போது, பாஸ்வேர்டை மீண்டும் அமைக்கவும்.
6. இனி வழக்கம்போல பைலை சேவ் செய்திடவும்.
நீங்கள் வேர்ட் 2002 / 2003 பயன்படுத்துபவராக இருந்தால், கீழே கொடுத்துள்ள செயல்முறையை மேற்கொள்ளவும்.

1. மேலே காட்டியபடி டூல்ஸ் மெனுவில் Protect Document என்பதைத் தேர்ந்தெடுக்கவும். Protect
Document  பிரிவு டாகுமெண்ட் விண்டோவின் வலது பக்கம் காட்டப்படும்.
2. இந்தக் கட்டத்தில், Editing Restrictions என்ற பிரிவு இருக்கும். இதில் Allow Only This Type of Editing என்பதனைத் டாகுமெண்ட் செக் பொக்ஸில் தேர்ந்தெடுக்கவும். இங்கு வேர்ட் புரோகிராம், செக் பொக்ஸ் பிரிவில் கீழ் விரி மெனுவினைத்தரும்.
3. இந்த மெனுவில் Tracked Changes என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. இங்கு Yes, Start Enforcing Protection என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது வேர்ட், Start Enforcing Protection என்ற டயலாக் பொக்ஸைக் காட்டும்.
5. இந்த டயலாக் பொக்ஸில் இருமுறை பாஸ்வேர்டினை அமைக்கவும்.
6. அடுத்து ஓகே கிளிக் செய்திடவும். பின்னர், வழக்கம் போல பைலை சேவ் செய்திடவும்.
நீங்கள் வேர்ட் 2007 பயன்படுத்தினால், கீழ்க்கண்ட மாற்றங்களை மேற்கொள்ளவும்.
1.ரிப்பனில், Review டேப்பினைக் காட்டுமாறு செய்திடவும்.
2. Protect குரூப்பில் Protect Document டூலில் கிளிக் செய்திடவும். வேர்ட் Protect Document கட்டத்தினை
வலது பக்கம் காட்டும்.
3. இந்தக் கட்டத்தில் Editing Restrictions என்ற பிரிவில், டாகுமெண்ட் செக் பொக்ஸ் கட்டத்தில் Allow Only This Type of Editing என்பதைத் தேர்ந்தெடுக்கவும். செக்பொக்ஸ் கீழாக வேர்ட், கீழ்விரி மெனு
ஒன்றைக் காட்டும்.
4. கீழ் விரி பட்டியலில், Tracked Changes என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
5. அடுத்து, Yes, Start Enforcing Protection என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு வேர்ட் Start Enforcing Protection என்ற டயலாக் பொக்ஸைக் காட்டும்.
6. இப்போது பாஸ்வேர்டை இருமுறை அமைக்க வேண்டியதிருக்கும். பின்னர் ஓகே கிளிக் செய்து, வழக்கம் போல பைலை சேவ் செய்திடவும்.
மேலே குறிப்பிட்ட பாதுகாப்பு வழியை அமைத்துவிட்டால், மற்றவர்கள், உங்கள் டாகுமெண்ட்டைப் பார்த்து, அவர்கள் விரும்பும் திருத்தங்களை மேற்கொள்ளலாம். ஆனால், நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவும், நீக்கவும், நீங்கள் அமைத்த பாஸ்வேர்ட் இருந்தால் மட்டுமே முடியும்.

Thursday, August 4, 2011

கம்ப்யூட்டர் வேகத்தை அதிகரிக்க சில வழிகள்...!

கம்ப்யூட்டர் பாவிக்கும் போது நிறைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.கம்ப்யூட்டர் Boot ஆகுவதற்கு அப்பிளிகேஷன்ஸ் ஓபன் பண்ணுவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். ஆகவே கீழ்வரும் சில வழிமுறைகளை செய்து பாருங்கள் கணனியின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

 (1) உங்கள் கணனி பூட் ( Boot) ஆகி முடியும் வரை எந்த அப்பிளிகேஷனையும் (Application) ஓப்பன் ( Open) பண்ணாதிருங்கள்.
 (2) ரிப்பிரஷ் ( Refresh) பண்ணுங்கள் ஏதாவது ஒரு அப்பிளிக்கேஷனை குளோஸ் பண்ணும் போதும்.அவ்வாறு பண்ணும் போது தேவையல்லாத பைல்கள் ரம்மில் ( RAM ) இருந்து நீக்கப்படும்.
 (3) டெக்ஸ்டோப்பில் பெரிய அளவிலான படங்களை ( Large file size images) வோல்பேப்பராக ( Wallpaper ) போடுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.அதன் மூலமாக ரம்முக்கு ( RAM ) செல்லும் 64 (MB) மீதப்படுத்த முடியும்.
(4) டெக்ஸ்டோப்பை ( Desktop ) ஷாட்கட்களால் ( Shortcuts) நிரப்பி வைக்க வேண்டாம்.தேவையான ஷாட்கட்டை மட்டும் வைத்திருங்கள்.ஒவ்வொரு ஷாட்கட்டுக்கும் 500 பைட்ஸ் ( Bytes) ரம்முக்கு ( RAM ) செல்லும்.
 (5) எப்போழுதும் ரிஸக்கல்பீன்குள் ( Recyclebin) இருக்கும் அழித்த பைல்களை அதற்குள்ளும் இருந்து நீக்கி விடுங்கள்.
 (6) தினமும் இன்டநெட் டெம்பரி பைல்களை அழித்துவிடுங்கள்.( Temporary Internet Files)
 (7) இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை டீபோறோமன்ட் ( Defragment) பண்ணுங்கள் அதன் மூலமாக உங்கள் ஹாட்டிஸ்கில் இருக்கும் இடைவெளிகள் சரி செய்யப்படும்.
 (8) உங்கள் ஹாட்டிஸ்கை இரு பார்டிஸ்சனாக ( Partitions) பிரித்து வையுங்கள்.ஒன்றில் சிஸ்டம் பைல்களும் மற்றையதில் அப்பிளிகேஷன் பைல்களையும் இன்ஸ்ரோல் பண்ண முடியும்.
 இவ்வாறான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உங்கள் கணனியை எப்போழுதும் வேகமாக வைத்திருக்க முடியும்.

Monday, August 1, 2011

வைரஸை வாசலிலேயே தடுக்கும் விண் பெட்ரோல்

நமக்குத் தெரியாமல் நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் அமர்ந்து கொண்டு நம்மை ஹைஜாக் செய்திடும் வைரஸ் புரோகிராம்கள் இப்போது அதிகம் வரத் தொடங்கி உள்ளன. மேலும் நம்முடைய பெர்சனல் தகவல்களைத் திருடி அனுப்பும் வைரஸ்பைல்களும் நிறைய வருகின்றன. இவை நம் கம்ப்யூட்டரில் புகுந்து அதன் என்ட்ரியை கம்ப்யூட்டரின் ரெஜிஸ்ட்ரியில் பதிவு செய்திடுகையிலேயே தடுக்க முயன்றால் எவ்வளவு நன்மையாக இருக்கும். இத்தகைய பணியைத்தான் விண் பெட்ரோல் (WinPatrol) என்ற புரோகிராம் செய்கிறது.
இந்த புரோகிராமினை ஏ.ஓ.எல். இமெயில் கிளையண்ட் புரோகிராமினை வடிவமைத்த Bill Pytlovany என்பவர் உருவாக்கியுள்ளார். இந்த புரோகிராம் கம்ப்யூட்டரில் பதிந்தவுடன் நம்
கம்ப்யூட்டரின் ரெஜிஸ்ட்ரியை ஒரு ஸ்நாப் ஷாட் எடுத்து வைத்துக் கொள்கிறது. பின் அதில் ஏதேனும் கோட் வரிகள் எழுதப்படும்போதெல்லாம் இது போல எழுதப்பட இருக்கிறது. இந்த புரோகிராம் முயற்சி செய்கிறது என்று எச்சரிக்கை செய்வதுடன் நீங்கள் அனுமதி கொடுத்த பிறகே ரெஜிஸ்ட்ரியில் எழுதவிடும்.
இதன்மூலம் நாம் விரும்பும் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடுகையில் மட்டுமே நாம் இதற்கு அனுமதிக்கலாம். திருட்டுத்தனமாக நுழைந்திடும் புரோகிராம்கள் எழுத முயற்சிக்கையில் அவற்றின் பெயரைப் பார்த்துவிட்டுத் தடுத்துவிடலாம். இந்த வகையில் விண் பெட்ரோல் ஒரு செக்யூரிட்டி மானிட்டராகச் செயல்படுகிறது.
வழக்கமான ஆண்டி வைரஸ் தொகுப்புகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட வைரஸ் பைல்களின் செயல்பாட்டினை வைத்து அவற்றை அடையாளம் கண்டு தடுக்க முயற்சி செய்திடும். ஆனால் இந்த புரோகிராம் வைரஸ் புரோகிராம்களுக்கென உள்ள சில மாறுபட்ட செயல்தன்மைகள் அனைத்தையும் கவனத்தில் கொண்டு செயல்படுகிறது. இதனை இலவசமாக டவுண்லோட் செய்திட www.winpatrol.com என்ற தளத்திற்குச் செல்லவும்.

Sunday, July 31, 2011

கம்ப்யூட்டர் வேகத்தை அதிகரிக்க புதிய வழிகள்

by-irenujan
கம்ப்யூட்டர் பாவிக்கும் போது நிறைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.கம்ப்யூட்டர் பூட் ஆகுவதற்கு அப்பிளிகேஷன்ஸ் ஓபன் பண்ணுவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். ஆகவே கீழ்வரும் சில வழிமுறைகளை செய்து பாருங்கள் கணனியின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. * உங்கள் கணனி பூட் ( Boot) ஆகி முடியும் வரை எந்த அப்பிளிகேஷனையும் (Application) ஓப்பன் ( Open) பண்ணாதிருங்கள்.
* ரிப்பிரஷ் ( Refresh) பண்ணுங்கள் ஏதாவது ஒரு அப்பிளிக்கேஷனை குளோஸ் பண்ணும் போதும்.அவ்வாறு பண்ணும் போது தேவையில்லாத பைல்கள் ரம்மில் ( RAM ) இருந்து நீக்கப்படும்.
* டெக்ஸ்டோப்பில் பெரிய அளவிலான படங்களை ( Large file size images) வோல்பேப்பராக ( Wallpaper ) போடுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.அதன் மூலமாக ரம்முக்கு ( RAM ) செல்லும் 64 (MB) மீதப்படுத்த முடியும்.
* டெக்ஸ்டோப்பை ( Desktop ) ஷாட்கட்களால் ( Shortcuts) நிரப்பி வைக்க வேண்டாம்.தேவையான ஷாட்கட்டை மட்டும் வைத்திருங்கள்.ஒவ்வொரு ஷாட்கட்டுக்கும் 500 பைட்ஸ் ( Bytes) ரம்முக்கு ( RAM ) செல்லும்…
* எப்போழுதும் ரிஸக்கல்பீன்குள் ( Recyclebin) இருக்கும் அழித்த பைல்களை அதற்குள்ளும் இருந்து நீக்கி விடுங்கள்.
* தினமும் இன்டநெட் டெம்பரி பைல்களை அழித்துவிடுங்கள்.( Temporary Internet Files)
* இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை டீபோறோமன்ட் ( Defragment) பண்ணுங்கள் அதன் மூலமாக உங்கள் ஹாட்டிஸ்கில் இருக்கும் இடைவெளிகள் சரி செய்யப்படும்.
* உங்கள் ஹாட்டிஸ்கை இரு பார்டிஸ்சனாக ( Partitions) பிரித்து வையுங்கள்.ஒன்றில் சிஸ்டம் பைல்களும் மற்றையதில் அப்பிளிகேஷன் பைல்களையும் இன்ஸ்ரோல் பண்ண முடியும்.
இவ்வாறான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உங்கள் கணனியை எப்போழுதும் வேகமாக வைத்திருக்க முடியும்

என்ன செய்யும் இந்த FUNCTION KEYS?

கணனி விசைப் பலகையின் மேல் வரிசையில் F1, F2 என பெயரிடப்பட்ட 12 விசைகள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இவை (Function Keys) பன்ங்ஷன் கீஸ் எனப்படுகின்றன. இந்த பன்ங்ஷன் விசைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தொழிற்பாடுகளைக் கொண்டுள்ளன.


இந்த பன்ங்ஷன் விசைகள் பயன்படுத்தப்படும் இயங்கு தளத்திலும் எப்லிகேசன் மென்பொருளிலுமே சார்ந்திருக்கின்றன. அதாவது இவை எல்லா எப்லிகேசன்களிலும் எல்லா இயங்கு தளங்களிலும் ஒரே மாதிரியாகத் தொழிற்படுவதில்லை. அதேவேளை சில விசைகள் சில எப்லிகேசன்களில் தனியாக தொழிற்படுவதோடு வேறு சில விசைகள் ALT மற்றும் CTRL விசைகளோடு சேர்த்தே இயக்கப்படும். உதாரணமாக விண்டோஸ் இயங்கு தளத்தில் ALT + F4 விசைகளை அழுத்துவதன் மூலம் இயக்கத்திலிருக்கும் ஒரு எப்லிகேசனை நிறுத்திவிட முடியும்.

விண்டோஸ் இயங்கு தளத்தில் மேலே குறிப்பிட்டது போல் எல்லா எப்லிகேசன்களும் பங்ஷன் விசைகளை ஆதரிப்பதில்லை. அதேவேளை சில விசைகள் எந்த செயற்பாடுகளும் வழங்கப்படாமலும் உள்ளன.

பங்க்ஷன் விசைகளில் சில பொதுவான தொழில்கள் கீழே விவரிக்கப்படுகின்றன.


F1
இந்த விசை அனேகமாக எந்த எப்லிகேசனிலும் அதற்குரிய உதவிக் குறிப்புகளடங்கிய பைலை வரவழைக்கும். அதேவேளை எந்த எப்லிகேசனும் திறக்கப்படாத நிலையில் இந்த விசையை அழுத்தும் போது விண்டோஸ¤க்குரிய ஹெல்ப் பைல் திறந்து கொள்ளும். எம். எஸ். வர்ட்டில் இந்த விசையை அழுத்த டாஸ்க் பேன் (Task Pane) திறந்து கொள்ளும் அதிலிருந்து உதவிகள் பெறலாம்.


F2
விண்டோஸில் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு பைலின் அல்லது போல்டரின் பெயரை மாற்ற (rename) இந்த விசை பயன்படும். எம். எஸ். வர்டில் Alt + Ctrl + F2 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்தும் போது open டயலொக் பொக்ஸ் திறக்கும்.



F3
இதனை அழுத்தும் போது கணினியில் பைல் போல்டர்களைத் தேடித்தரும் Search விண்டோ திறந்து கொள்ளும். எம். எஸ். வர்டில் Shift + F3 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் வாக்கியமொன்றின் ஆரம்பத்தில் ஆங்கில பெரிய எழுத்தில் (upper case) உள்ளதை சிறிய எழுத்தாகவும் (lower case) சிறிய எழுத்திலுள்ளதை பெரிய எழுத்தாகவும் மாற்றிக்கொள்ளலாம்.


F4
விண்டோஸில் எந்த தொழில்பாடையும் செய்வதில்லை. எம். எஸ். வர்டில் இறுதியாகச் செய்த வேலையை மறுபடி செய்யும் Alt + F4 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் தற்போது இயக்கத்திலிருக்கும் எப்லிகேசனை நிறுத்தி விடலாம். எப்லிகேசன் எதுவும் திறந்திறாத நிலையில் Alt + F4 விசைகளை அழுத்தி விண்டோஸ் இயக்கத்தையும் நிறுத்த முடியும்.


F5
விண்டோஸில் இந்த விசையை அழுத்தி ஒரு விண்டோவின் உள்ளடக்கத்தை Refresh செய்து புதுப்பிக்கலாம். அனேகமான வெப் பிரவுஸர்களில் ஒரு இணைய பக்கத்தைப் புதுப்பிக்கவும் இந்த விசையே பயன்படுகிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட பக்கத்தை மறுபடி ஆரம்பத்திலிருந்து தோன்றச் செய்யலாம். எம். எஸ். வர்டில் இந்த விசை அழுத்தி Find & Replace டயலொக் பொக்ஸை வரவழைக்கலாம். எம். எஸ். பவர் பொயிண்டில் இந்த விசையை அழுத்தி ஸ்லைட் ஷோவை இயக்க முடியும்.


F6
இண்டர் நெட் எக்ஸ்ப்லோரர் மற்றும் மொஸில்லா பயபொக்ஸ் பிரவுசர்களில் கர்சரை எட்ரஸ் பாரை நோக்கி நகர்த்தலாம் Ctrl + Shift + F6 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் திறந்து வைத்துள்ள எம். எஸ். வார்ட் ஆவணங்களில் மாறிக்கொள்ள


F7
எம். எஸ். வர்ட் மற்றும் பவர்பொயின்ட் மென் பொருள்களில் எழுத்துப் பிழைகளையும் இலக்கணப் பிழைகளையும் கண்டறிந்து சரி செய்யக் கூடிய டயலொக் பொக்ஸ் தோன்றும்.


F8
இந்த இசையை விண்டோஸ் இயங்க ஆரம்பிக்கும் முன்னர் அழுத்துவதன் மூலம் விண்டோஸ் ஸ்டாட்-அப் மெனுவை வரவழைக்கலாம். விண்டோஸ் ஆரம்பிப்பதில் சிக்கல் தோன்றும் போது அதனை சேப் மோடில் (Safe Mode) இயக்க இந்த விசையே பயன்படுத்தப்படுகிறது-


F9
இந்த விசையை அழுத்தும் போது விண்டோஸில் எந்த இயக்கமும் நடைபெறாது.


F10
விண்டோஸில் திறந்திருக்கும் எந்த எப்லிகேசனிலும் மெனுபாரை இயக்க நிலைக்கு மாற்றி (activate) அதன் மூலம் கீபோர்டைக் கொண்டே மேலும் தெரிவுகளை மேற்கொள்ளலாம். அத்தோடு Shift + F10 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் ரைட் க்ளிக் செய்யும் போது தோன்றும் கண்டெக்ஸ்ட் மெனுவை வரவழைக்கலாம்.


F11
அனேகமான இணையை உலாவிகளில் (வெப் பிரவுஸர்) முழுத் திரையைத் தோன்றச் செய்யும்.


F12
எம். எஸ். வர்டில் ஷிavலீ as விண்டோவை வர வழைக்கும். அத்தோடு Shift + F12 விசைகளை அழுத்தும் போது வர்டில் ஆவணமொன்று சேமிக்கப்படும். Ctrl + Shift + F12 விசைகளை அழுத்தி Print டயலொக் பொக்ஸை வரவழைக்கும்.

விண்டோஸில் எல்லா பங்க்ஷன் விசைகளும் பயன்படுவதில்லை என்பதை இப்போது நீங்கள் புரிந்திருக்கலாம். (உதாரணம் F9) எனவே இதனை சாதகமாகப் பயன்படுத்தி நீங்கள் விரும்பும் ஒரு எப்லிகேசனுக்கு அந்த விசையை ஒதுக்கிவிட முடியும். அதன் மூலம் குறிப்பிட்ட அந்த பங்ஷன் விசையை அழுத்தி ஒரு எப்லிகேசனைத் திறந்து கொள்ளலாம். அதற்குப் பின்வரும் வழிமுறைகளைக் கையாளுங்கள்.

டெஸ்க் டொப்பில் அல்லது ஸ்டார்ட் மெனுவில் இருக்கும் நீங்கள் விரும்பிய எப்லிகேசனுக்குரிய ஐக்கன் மேல் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் Properties தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்று டயலொக் பொக்ஸில் Shortcut டேபில் க்ளிக் செய்யுங்கள். அங்கு Shortcut Key எனுமிடத்தில் நீங்கள் விரும்பிய பங்க்ஷன் கீயை அழுத்தி ஒகே செய்து விடுங்கள்

உங்கள் போட்டோவை அழகு செய்ய இதோ 10 இனணயதளங்கள்...........

Photoshop இல் நாங்கள் ஒரு வித்தியாசமான effect ஒன்றை நமது புகைப்படத்துக்கு கொடுக்க நாம் அதிக நேரத்தை செலவழிக்க வேண்டி வரும். அதோடு அந்தமாதிரியான விடயங்கள் Photoshop இல் கைதேந்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம். Photoshop என்றாலே என்ன்ன என்று தெரியாதவர்கள் கூட Funny Image Effect செய்யக்கூடியவாறு நிறுவப்பட்டுள்ள தரமானதும்
முதன்மையானதுமான (என் பார்வையில் ) இணையதளங்களை உங்களுக்கு தெரியபடுத்த விருபுகிறேன். இலகுவாக உங்களுக்கு பிடித்த effect ஐ தெரிவு செய்யுங்கள். உங்கள் புகைபடத்தை upload செய்யுங்கள் . அவளவுதான்.
முதன்மையானதுமான (என் பார்வையில் ) இணையதளங்களை உங்களுக்கு தெரியபடுத்த விருபுகிறேன். இலகுவாக உங்களுக்கு பிடித்த effect ஐ தெரிவு செய்யுங்கள். உங்கள் புகைபடத்தை upload செய்யுங்கள் . அவளவுதான்

Funny.Pho.to * Over 300+ Effects

PhotoFunia

Fun4ToBox

PicaritA

Photo505

LoonaPIX

DumPr

WriteOnIt

ImageChef

FaceinHole

என்ன இந்த System Bus ?

BY-IRENUJAN
கணினி மதர்போர்டில்ஒரு பகுதியிலிருந்து மற்றுமொரு பகுதிக்கு டேட்டாவைக் கடத்தும் பாதையையே பஸ் எனப்படுகிறது. இந்தப் பாதை மதர்போடிலுள்ள பிற பகுதிகளை சீபியூவுடனும் நினைவகத்துடனும் இணைக்கிறது.

இதனை இண்டர்னல் பஸ்(internal bus) எனவும் அழைக்கப்படும். அதேபோல் எக்ஸ்பேன்சன் பஸ் (expansion bus) எனற பகுதியும் உண்டு. இது சவுண்ட் காட், வீஜிஏ காட், மோடெம் போன்ற எக்ஸ்பேன்சன் போர்டுகள் சீபியூ மற்றும் நினைவகத்தை அணுகுவதற்கான பாதையாகும்.
இந்த இரு வகை பஸ்களும். எட்ரஸ் பஸ்(address bus)டேட்டா பஸ் (data bus)என இரு பகுதிகளைக் கொண்டிருக்கும். டேட்டா பஸ் என்பது டேட்டாவைக் கடத்தும் அதே வெளை எட்ரஸ் பஸ் எனப்படுவது டேட்டா எப்பகுதிக்குச் செல்ல வேண்டும் என்பதைக் காட்டுகிறது.
பஸ்ஸின் அளவை அதன (width)அகலம் எனப்படும். ஒரே நேரத்தில் எவ்வளவு டேட்டாவைக் அனுப்ப முடியும் என்பதை இந்த பஸ் வித் தீர்மானிக்கிறது. உதாரணமாக 16 பிட் பஸ்ஸானது 16 பிட் கொண்ட டேட்டாவை கடத்தக் கூடியது.
ஒவ்வொரு பஸ்ஸும் இயங்கும் வேகத்தைkக்லொக் ஸ்பீட் (clock speed) எனப்படும். இது மெகா ஹேட்ஸில் இல் அளவிடப்படும். அதிக வேகம் கொண்ட பஸ் மூலம் விரைவாக டேட்டாவைக் கடத்த முடியும். அதன் காரணமாகஒரு அப்லிகேசன் வேகமாக இயங்கும்

Saturday, July 30, 2011

பைல்களை அழிக்க முடியவில்லையா!

ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து கொள்ளும். பைலை அழிக்க முடியாது (“Cannot Delete File”) என்று அதிரடியாகத் தகவல் தரும்.


அது ஒரு டாகுமெண்ட் பைலாகவோ அல்லது மியூசிக் மற்றும் பட பைலாகவோ இருக்கலாம். என்ன இது இவ்வாறு எதிர்வாதம் செய்கிறது? என்று எண்ணி மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்வோம்; ஆனால் மீண்டும் மீண்டும் அதே செய்திதான் வரும்.

சில வேளைகளில் காரணங்களும் காட்டப்படும். ஹார்ட் டிஸ்க்கில் போதுமான இடம் இல்லை. அதனால் அழிக்க முடியவில்லை என்று காரணம் கிடைக்கலாம். இது இன்னும் அதிகமான குழப்பத்தில் உங்களை சிக்க வைக்கும். ஏனென்றால் அதிக இடம் வேண்டும் என்பதற்காகத்தானே நீங்கள் பைலை அழிக்க முயற்சிக்கிறீர்கள். சில பைல்களுக்கு இந்த பைலை இன்னொருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அல்லது இன்னொரு புரோகிராம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் அழிக்க முடியாது என்று காரணம் வரலாம்.
எனவே அழிப்பதாக இருந்தால் அந்த பைலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் புரோகிராமை முதலில் நிறுத்து என்று செய்தி கிடைக்கும். இப்ப என்னதான் செய்றது? என்ற பெரிய கேள்விக் குறியுடன் நீங்கள் மானிட்டரைப் பார்த்துக் கொண்டு அமர்ந்துவிடுவீர்கள், இல்லையா? கீழே சில டிப்ஸ்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் இந்த பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்.

முதலில் நீங்கள் அழித்திட எண்ணும் பைல் கம்ப்யூட்டரில் எங்கே உள்ளது என்று சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக “myessay. txt” என்னும் பைல் என்னும் போல்டரில் இருக்கலாம். இதனுடைய சரியான முகவரி C:Documents and Settings User Name My Documents என்பது. பைலின் பெயரையும் இந்த முகவரியையும் ஒரு பேப்பரில் குறித்துக் கொள்ளுங்கள்.

இனி கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடுங்கள். கம்ப்யூட்டர் பூட் ஆகும் போது எப்8 கீயை அழுத்துங்கள். அப்போது திரையில் Advanced Boot Options Menu மெனு கிடைக்கும். அந்த மெனுவில் Safe Mode with Command Prompt என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இனி டாஸ் ப்ராம்ப்ட்டில் கம்ப்யூட்டர் பூட் ஆகி நிற்கும். இனி டாஸ் மோடில் துடிக்கும் புள்ளியில் cd C:Documents and SettingsYour NameMy Documents என டைப் செய்திடவும் இதில cd என்பது Change Directory என்பதைக் குறிக்கிறது.

டைப் செய்து என்டர் அழுத்தியவுடன் டாஸ்கர்சர் உங்கள் பைல் உள்ள டைரக்டரியில் சென்று நிற்கும். இனி del myessay.txt என டைப் செய்து என்டர் தட்டினால் நீங்கள் பல வழிகளில் டெலீட் செய்திட முயன்று தோற்றுப் போன பைல் இப்போது நீக்கப்பட்டுவிடும். அப்பாடி! கம்ப்யூட்டர் உங்களுக்குக் கொடுத்த சவாலில் வெற்றி பெற்றுவிட்டீர்களா! சந்தோஷமா!!

மின்னஞ்சல் முகவரியில் "@" என்ற சின்னம் எப்படி வந்தது...?

ஒவ்வொருவருடைய மின் அஞ்சல் முகவரியிலும் "@" என்ற சின்னம் வருவது யாவரும் அறிந்ததே. இந்தச் சின்னம் எப்படிப் புழக்கத்தில் வந்தது?மின் அஞ்சல் முகவரியில் முதன் முதலாக இந்த @ சிம்னத்தை உபயோகித்தது "ரே டாம்லின்ஸன்" (Ray Tomlinson) என்னும் ஒரு கம்ப்யூட்டர் பொறியாளர்.
இவர் 1971ஆம் ஆண்டு முதலில் தனக்குத் தானே ஒரு மின் அஞ்சலை இந்தச் சின்னத்தை உபயோகித்து அனுப்பிக்கொண்டார்.
ஏன் இவர் இந்தச் சின்னத்தை தேர்ந்தெடுத்தார்? அவர் சொல்கிறார், " கீ போர்டில் அக்கரையுடன் பார்த்தேன் எவருடைய பெயரிலிலும் வராததும், குழப்பம் விளைவிக்காததுமாக சின்னம் இருக்கிறதா என்று, பின் இதைத் தேர்ந்தெடுத்தேன்." என்று சொன்னார்.

இந்த @ சின்னம் கம்ப்யூட்டர் கீ போர்டில் எப்படி இடம் பெற்றது? மொழி வல்லுனர்கள், எப்படி என்பதில், ஒத்துப்போகவில்லை. சிலர் நினைத்தனர், மத்திய காலத்தில் (Early Middle ages), துறவிகள் கையெழுத்துப் ப்ரதிகளை சிரமத்துடன் படிக்கும்பொழுது லத்தீன் மொழி வார்த்தை "ad", "at" or "towards" or "By" என்று பல அர்த்தங்களைக் கொண்டிருப்பதைக் கண்டனர்.
அநேக வல்லுனர்கள் இந்த @ சின்னம் சமீப காலத்தில், அதாவது 18ஆம் நூற்றாண்டில் புழக்கத்திற்கு வந்ததுதான், பொருட்களின் விலையை குறிப்பிட ஏற்பட்டதுதான் என்று வாதாடினர். அதாவது உதாரணமாக 10 பென்சுக்கு 5 ஆப்பிள் ("5 apples @ 10 pence." ).மற்றும் ஒரு மொழி வல்லுனர், ஆராய்ச்சியாளர் Denis Muzerelle சொல்கிறார், இது ஃப்ரெஞ்ச், ஜெர்மானிய, வியாபாரிகள் எழுத்து "a"யை வேகமாக உச்சரிக்கும் பொழுது ஏற்பட்ட திரிபு என்கிறார்.
ஆனால் ஜூலை மாதம் 2000 ஆண்டில் இத்தாலிய ஆரய்ச்சியாளர் ஒருவர், இந்த சின்னம் @ 14ஆம் நூற்றாண்டின் வியாபார தஸ்தாவேஜுகளில் இந்தக் குறி காணப்படுவதைக் கண்டுபிடித்தார். இந்தச் சின்னம் ஒரு அளவை the "anfora," or jar குறிக்க உபயோகிக்கப்பட்டது என்றார்.
Giorgio Stabile 1492ஆம் வருடத்திய லத்தீன் - ஸ்பானிஷ் அகராதியில் "anfora" என்பது "arroba" ( ஒரு நிறுவளளவை) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடித்தார். ஆகையால், 1885ல் வியாபரரீதியான "a" (the "commercial a") முதல் மாடலான அண்டர்வுட் தட்டச்சு மெஷினில் சேர்க்கப்பட்டது இயற்கையே.
80 வருடங்களுக்குப் பிறகு அங்கிருந்து ஸ்டாண்டெர்ட் கம்ப்யூட்டர் கேரக்டரில் (Such as ASCII) இடம் பெயர்ந்துவிட்டது. (It's therefore natural that, in 1885 the "commercial a" was included on the keyboard of the first model of Underwood typewriter and from there migrated into the standard set of computing characters (such as ASCII) 80 years later. )
தற்போதைய பிரச்சனை இந்த @ சின்னத்தை எப்படி உச்சரிப்பது? ஸ்பானியர்கள் இதை "arroba" என்றும், ஃப்ரெஞ்ச்காரர்கள் "arobase." என்றும், அமெரிக்கர்களும், பிரிட்டிஷாரும் "at-sign." என்றும், ஜெர்மானியர் ("at-Zeichen"), என்றும், எஸ்தோனியர் ("ஐt-mஐrk") என்றும், ஜப்பானியர் ("atto maak"). என்றும் உச்சரிக்கிறார்கள்.

ஆயினும், அதிகமான பாஷைகளில், இந்த சின்னம், பலதரப்பட்ட உருவகம், பொதுப்படையாக, பிராணிகளுக்கு ஒப்பிட்ப்படுகிறது. ஜெர்மானியர், ஃபின்ஸ், ஹங்கேரியன், போல்ஸ், தெற்கு ஆப்பிரிக்கர்கள், இந்தச் சின்னத்தைக் குரங்க்கின் வாலாகப் பார்க்கிறர்கள். மற்றும் சிலர் நத்தைக்கு ஒப்பிடுகிறார்கள். இப்படியாகப் பலவிதம்.
"However, in most languages the sign is described using a wide spectrum of metaphors lifted from daily life. References to animals are the most common. Germans, Dutch, Finns, Hungarians, Poles and South Africans see it as a monkey tail. The snail - oddly enough for the anti-snail-mail set - portrays the @ sign not only in French ("petit escargot") and Italian ("chiocciola"), but also in Korean and Esperanto ("heliko"). Danes and Swedes call it "snabel-a" - the "a" with an elephant's trunk; Hungarians a worm; Norwegians a pig's tail; Chinese a little mouse; and Russians a டாக்"
உணவு வகைகளும் இதற்கு உருவகம் தந்துள்ளன.

Multi Skype Launcher: ஒரே நேரத்தில் பல ஸ்கைப் கணக்குகளை பயன்படுத்த

ஸ்கைப் சேவையை உலகெங்கும் பலர் இணைய வழியாக பேசுவதற்கும் வீடியோ காலிங் செய்வதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவை Voive Over IP என்ற தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது. இதன் மூலம் ஸ்கைப் பயனர்கள் மற்ற ஸ்கைப் பயனர்களுக்கு இலவசமாகப் பேச முடியும். தொலைபேசி மற்றும்
  வேறு அழைப்புகளுக்கு கணக்கிலிருந்து பிடித்துக் கொள்வார்கள். தற்போது இந்த சேவையை மைக்ரோசாப்ட் 8.5 பில்லியன் டொலர்களுக்கு வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை தற்போது 663 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆனால் இந்த சேவையில் ஒரு நேரத்தில் ஒரு பயனர் கணக்கைத் தான் பயன்படுத்த முடியும். உங்களுக்கு ஒரே நேரத்தில் பல ஸ்கைப் கணக்குகளில் நுழைய வேண்டும் என ஆசைப்பட்டால் ஒரு இலவச மென்பொருள் உதவுகிறது. அதன் பெயர் Multi Skype Launcher.
இந்த மென்பொருள் மூலம் ஒரே கணணியில் பல ஸ்கைப் கணக்குகளில் நுழைந்து பல நண்பர்களிடம் பேச முடியும். இந்த மென்பொருளைத் தரவிறக்கியதும் நிறுவி விட்டு தங்களது கணக்கில் முதலில் நுழையவும்.
பின்னர் ADD என்பதைக் கிளிக் செய்து தங்களின் பல கணக்குகளைச் சேர்த்துக் கொண்டு பயன்படுத்தலாம். வெறும் 1.7 Mb அளவே உடைய இலவச மென்பொருளாகும்.

Friday, July 22, 2011

கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள்

இன்று நீங்கள் கூகுள் தேடல் பொறியை உபயோகப்படுத்தும் போது கீழ் காட்டப்படுள்ளவாறு ஓர் எச்சரிக்கை செய்தி தோன்றினால் உங்கள் கணனி ‘மெல்வெயாரி’னால் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். இதனைத் தெரிவித்தது நாங்கள் அல்ல கூகுள்.  ஆம், உங்கள் கணனி பாதிக்கப்பட்டதுள்ளதினையே கூகுள் இதன் மூலம் உறுதிப்படுத்துகின்றது.  இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்ட போலியான ‘அண்டி வைரஸ்’ மென்பொருட்களே உங்கள் கணனி பாதிக்கப்பட பிரதான காரணமென கூகுள் தெரிவிக்கின்றது.  மைக்ரோசொப்டின் விண்டோஸ் இயங்குதளத்தினைக் கொண்ட கணனிகளையே ‘மெல்வெயார்’ தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக கூகுள் தெரிவிக்கின்றது.
இவ்வாறான தகவல் தோன்றினால் உங்கள் கணனியை உடனே பரீட்சிக்குமாறும் தேவையானால் சம்பந்தப்பட்ட விபரங்கள் மற்றும் ஆலோசனைகளை கூகுளிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அது குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களைக் கூகுளின் வலைப்பூவில் தெரிந்துகொள்ளலாம்.